சுந்தராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா!
ADDED :4258 days ago
ஆர்.கே.பேட்டை: சுந்தராஜ பெருமாள் கோவிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை, பங்குனி உத்திர பெருவிழா நடக்கிறது.ஆர்.கே.பேட்டை, பிராமணர் தெருவில், 500 ஆண்டு பழமையான சுந்தரவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலில் கடந்த, 1987ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம், மார்கழி நித்திய பூஜை, பங்குனி உத்திரம் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.வரும் ஞாயிற்றுக்கிழமை காலை, 11:00 மணிக்கு, பங்குனி உத்திரத்தை ஒட்டி, சுந்தரராஜ பெருமாளுக்கு, திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலை 6:00 மணியவில், திருக்கல்யாணம் நடைபெறும். பின், கோவில் வளாகத்தில் சுவாமி உலா வருகிறார்.