உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுர பூர்ணிமா விழா கொண்டாட்டம்

கவுர பூர்ணிமா விழா கொண்டாட்டம்

கோவை: கோவை கொடிசிய அருகேயுள்ள ஸ்ரீஜெகநாதர் கோவிலில் நேற்று கவுர பூர்ணிõ விழா நடந்தது. மேற்குவங்க மாநிலத்தில் பிறந்தவர் சைதன்யர். இவர் 16 வயதில் பள்ளியை நடத்தும் அளவுக்கு கல்வியில் தேர்ச்சி பெற்ற  இவர். மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணத்தை கற்பித்தவர். இவர் அவதரித்த நாளான மார்ச் 16-ம் தேதி உலகமெங்கிலும் உள்ள ஜெகநாதர் கோவிலில் , கவுர பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக கொடிசியா அருகேயுள்ள ஸ்ரீஜெகநாதர் கோவிலில் நேற்று விழா கொண்டாடப்பட்டது. இஸ்கான் முக்கிய தலைவர்களின் ஒருவரான ராதாநாத் சுவாமி மஹாராஜனின்  சிறப்பு சொற்பொழிவு மற்றும் ஆராதனைகள் நடந்தன. பங்கேற்ற திரளான பக்தர்களுக்கு அனுகல்ப் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !