கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :4264 days ago
பொள்ளாச்சி: கோவை, பொள்ளாச்சி பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தேவனாம்பாளையம் அமணேஸ்வரரர் கோவில் , ஜோதிநகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், கப்பளாங்கரை பரமசிவன் கோயில், பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவில் உள்ளிட்ட கோயில்களில் சிவன் சன்னதியில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன.
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில், பாலக்காடு ரோடு லஷ்மி பெருமாள் கோவிகளில், நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை நடந்த பூஜைகளில் பக்தர்கள திரளாக பங்கேற்று வழிபட்டனர்.