பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4264 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திலுள்ள விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவிலில் வரும் 19-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
அதையொட்டி நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் புனித நீர் கொண்டு வரப்பட்டது. இரவு 10.30 மணியளவில் கிராம சாந்தி நடந்தது. தொடர்ந்து இன்று கணபதி பூஜை, புண்யா வசனம் உள்ளிட்ட பூஜைகளும், நாளை முதல்கால யாகபூஜையும் நடக்கிறது. அடுத்து 18-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை, இரவு யந்திரஸ்தாபனம், அஷ்பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெறும்.