திரவுபதியம்மன் கோயில் இன்று குண்டம் திருவிழா
ADDED :4264 days ago
ஆணைமலை: ஆணைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று கலை 9.05 மணிக்கு நடக்கிறது.ஆணைமலை பகுதியில் நடைபெறும் திருவிழாக்களில் திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழாவும் ஒன்று. கடந்த மாதம் 28-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று இரவு 9.00 மணிக்கு குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. குண்டம் இறங்குவதற்காக விரதம் இருந்த பக்தர்கள் 60 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள குண்டத்தில் இறங்குகின்றனர். இதையடுத்து நாளை, ஊர்வலம் வந்த தேர் நிலை நிறுத்தல் மற்றும் ஊஞ்சல், பட்டாபிஷேகம் நடக்கிறது. வரும் 19-ம் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் போர் மன்னன் காவு நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.