திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்
ADDED :4264 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர் கள் மலையை சுற்றி நடந்தே கிரி வலம் சென்று வருகின்றனர். தமிழ்நாடு மட்டு மின்றி பக்கத்து மாநிலங்க ளில் இருந்தும் திருவண்ணா மலைக்கு பக்தர்கள் வருகின்றனர்.இந்த மாதத்திற்கான பவுர் ணமி நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று இரவு 11.36 மணி வரை பவுர்ணமி இருந்தது. அதைத்தொடர்ந்து மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று காலையும், பகலிலும் தொடர்ந்து கிரிவலம் சென்றனர்.முன்னதாக நேற்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட் டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.