புளியாம்பாறை பகவதி கோவில் தேர் திருவிழா கோலாகலம்
கூடலூர் : கூடலூர் புளியாம்பாறை ஆயிரம்வில்லி பகவதி கோவில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. கூடலூர் புளியாம்பாறை, ஆயிரம்வில்லி பகவதி கோவில் திருவிழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. 15ம் தேதி காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகள், வழிபாடு பூஜைகள் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு மதிய பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. மாலை 6:00 மணிக்கு அட்டிகொல்லி பகவதி கோவிலிருந்து, பெண்கள் குழந்தைகளின் தாலப்பொலி விளக்கு ஏந்தியும், செண்டை மேளம் இசைக்க, திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில், அலகரிக்கப்பட்ட யானை மீது ஆயிரம்வில்லி பகவதியம்மன் ஊர்வலமாக வந்தார். ஊர்வலம், புளியம்பாறை வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு இசை நிகழ்ச்சி நடந்தன. நேற்று காலை சிறப்பு பூஜையும் விழா நிறைவு பெற்றது.