உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயில் ஸ்தல வரலாறு

நத்தம் மாரியம்மன் கோயில் ஸ்தல வரலாறு

திண்டுக்கல் மாவட்டத்தில் கீழ் திசையில் அமைந்துள்ள நத்தத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன் கோயில் 400 ஆண்டு பழமை வாய்ந்தது. பக்தர்கள் வேண்டும் வரங்களை அருளும் சக்திக் கொண்ட தெய்வமாக
விளங்குகிறார். 400 ஆண்டுக்கு முன்னர் வட தேசத்திலிருந்து நாயக்க வம்சத்தில் பிறந்த லிங்கப்பநாயக்கர் என்பவர் சோழ நாட்டில் பகுதிகளாக ஸ்ரீரங்கம், திருச்சி, விராலிமலை, மணப்பாறை ஆகிய ஊர்கள் வழியாக தென்மதுரை பாண்டிய நாட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.அப்பொழுது மலைகள் சூழ்ந்த பசுமை நிறைந்த காடுகளை பார்த்தார். வளம் நிறைந்த அழகுடன் கூடிய அந்த இடத்தை பார்த்ததும், லிங்கப்பநாயக்கருக்கு அந்த இடத்தை விட்டு அகல மனம் வரவில்லை.மதுரை நோக்கி போக வேண்டாமென முடிவுக்கு வந்து அதே இடத்திலேயே தங்கி கோட்டை கொத்தளங்கள், பரிவாரங்களை அமைத்தார். பின்னர் அவருக்கு மதுரை மன்னர்திருமலைநாயக்கரின் நட்பு ஏற்பட்டது. அவர் அனுமதியுடன் லிங்கப்பநாயக்கர் தான் இருந்த பகுதிக்கு சிற்றரசன் ஆனார். தான் ஆட்சி செய்த ஊருக்கு இரசை நாடு என பெயரிட்டார்.அரண்மனைக்கு பால்காரர் ஒருவர் தினமும் பக்கத்து ஊரிலிருந்து செப்புக்குடத்தில் பாலை எடுத்து வருவா ர். ஒருநாள் பாலை கறந்து அவன் வீடு அருகில் வைத்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது பால் குடம் காலி யாக காணப்பட்டது. அப்போது அவர் அச்சம்பவ த்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஆனால், குடத்தில் வைத்த பால் தொடர்ந்து மாயமானது. இதனால், பால்காரர் கலக்கமடைந்தார். யார் பாலை திருடியது என தவித்தார். அரண்மனைக்கு பால் ஒழுங்காக வராததால், பால்காரரை அழைத்து வர அரசர் உத்தரவிட்டார்.
அரண்மனையில் விசாரணை துவங்கியது. இதில் பால்காரர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பால்காரர் பாலை திருடி விட்டு அதை மறைப்பதற்காக பால் காணாமல் போனதாக பொய் சொல்கிறார் எனக் கூறி, லிங்கப்பநாயக்கர் பால்காரரைதண்டிக்க உத்தரவிட்டார்.அப்போது பால்காரர் நடுங்கியப்படி, கூனிகுறுகி சத்தியமாக நான் பாலை திருடவில்லை. வேண்டுமானால் பால் காணாமல் போவதை நீங்களே வந்து பாருங்கள் என கெஞ்சினான். அரசரும் சோதனை செய்ய உத்தர விட்டார். பால்காரர் வழக்கம் போல அதே இடத்தில் செப்புக்குடத்தில் பாலை வைத்தார்.அப்போது திடீரென சூறாவளி காற்றடித்தது. அரசன் கண்ணில் தூசி விழுந்தது. ஆனாலும், அரசனின் கவ னம் முழுவதும் பால்குடம் மீது இருந்தும் பால் காணாமல் போனது. இதனை கண்ட அரசர் லிங்கப்பநாயக்கர் அதிர்ச்சியடைந்தார்.அரசனும் மற்ற ஏவலாள்களும் அந்த பால் குடம் இருந்த இடம் நோக்கி சென்று அவ்விடத்தில் பார்த்த போது அவ்விடத்தில் " திகிலாங்கொடி படர்ந்து காணப்பட்டது. அரசர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார். அப்போது இந்த கொடி வேர் அவரின் காலை தட்டியது. அப்போது அதை அரசர் உற்று நோக்கினார். அந்த இடத்தில் ஒரு சிலையின் சிரசு(தலை) மட்டும் தெரிந் தது.அந்த இடத்தை மன்னரின் ஆணைப்படி தோண் டும் போது அங்கு மாரியம்மனின் முழு உருவச் சிலையும் கிடைத்தது.அம்மனின் சிலையை வெளியில் எடுக்க கடப் பாரையால் தோண்டும் போது , அம்மனின் தோளில் கடப்பாரை முனைப் பட்டு ரத்தம் கொட்டியது. அதிர்ச்சி யடைந்த மன்னர் "" தாயே எங்களை மன்னித்து விடு எங்களையும் எங்கள் நாட்டையும் காப்பாற்று என மனமுருகி கும்பிட்டார். சிறிது நேரத்தில் ரத்தம் நின்றது. சுயம்பாக காட்சி தந்த மாரியம்மன் சிலையை வெளியில் எடுக்க வேண்டாம். மஞ்சள் நீராட்டி அந்த இடத்திலேயே திருமஞ்சணம் செய்யும்படி உத்தரவிட்டார். காலப்போக்கில் மாரியம்மன் சிலைக்கு கோயில் கட்டி விழா நடத்தவும் மன்னர் ஆசைப்பட்டார். அதன்படியே கோயிலையும் கட்டிமுடித்தார். மேலும் ரத்த வந்த அம்மன் சிலை அங்கு இருந்ததால், அப்பகுதி ரத்தம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் ரத்தமானது மருவி "நத்தம் என அழைக்கப்பட்டது. உற்சவர் திருமேனி நின்ற நிலையில் உள்ளது. கோயிலில் விநாயகருக்கு சன்னதி உள்ளது. அருகில் சுப்பிரமணியரும் காட்சியளிக்கிறார்.விநாயகர்சிலைக்கு அருகில் நவக்கிரக சிலைகளும் உள்ளன. அமாவாசை போது உலுப்பக்குடி கரந்தன் மலையில் வற்றாத கன்னிமார் கோயில் தீர்த்தம் எடுத்து வருவதுடன் உற்சவம் துவங்கி 16 நாட்கள் திருவிழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !