உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

நாக காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

சிதம்பரம்: ஸ்ரீமத் கற்பூர நாக காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.
சிதம்பரம் காயத்ரி அம்மன் கோவில் தெருவிலுள்ள, ஸ்ரீமத் கற்பூர நாக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 16ம் தேதி காலை முக்குருனி விநாயகர் பிரார்த்தனை நடந்தது. நேற்று காலை 9:00 மணியளவில் கலா கர்ஷணம், யாகசாலைப் பிரேவசம், வடுக பூஜை, நியாச அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மாலை 6:00 மணியளவில் முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று 18ம் தேதி காலை 9:00 மணியளவில் இரண்டாம் கால  பூஜை நடக்கிறது.
 நாளை (19ம் தேதி) காலை 10:00 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கும்பாபி@ஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !