கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கருட சேவை!
பெரியநாயக்கன்பாளையம்: பெரிய நாயக்கன்பாளையம் ஸ்ரீபூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 7-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ம் தேதி துவங்கியது. வரும் 21-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி 16 நாட்கள் கோவில் வளாகத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை திவ்ய பிரபந்த சேவாகாலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சரஸ்வதி அலங்காரம், சிம்மவாகனம், காளிங்க நர்தன அலங்காரம், அனுமந்த வாகனம், கருடவாகனம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (18-ம் தேதி) மாலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தொடர்ந்து குதிரை வாகனம் ,பரிவேட்டை, சேஷவாகனம், தெப்பத்தேர், பல்லக்கு சேவை, சந்தன சேவை சாற்றுமுறை, தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி , தினசரி இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கரிவரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.