பட்டீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழா
ADDED :4252 days ago
போரூர்: கோவை, பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று முன்திம் அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர் பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து அனைத்து மூலவர்க்கும் கால சாந்தி விஷேச பூஜை செய்வித்து, சிவகாமி அம்பிகை உடனமர் நடராஜ பெருமானுக்கு 16 வகை திரவியத்தால் அபிஷேகம், ஸ்நபன கலச, ருத்ர கலச அபிஷேக பூஜைகள் நடந்தன. இருவருக்கும, பட்டாடை, பூமாலை, தங்க ஆபரணத்தால் அலங்காரம் செய்து உச்சிகால பூஜை, மகாதீபாராதனை, சோடாச தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு நடராஜபெருமாள்,சிவகாமி அம்பாள் சப்பரங்களில் எழுந்தருளி, திருக்கோயில் உட்பிரகாரம் வெளியே திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பல்வேறு பூஜைகள் சடங்குகளுக்கு பின் பக்தர்களுக்கு பங்குனி உத்திர தரிசனமளித்தனர்.