பொள்ளாச்சி மதுரை வீரன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஜோதி நகர், மதுரை வீரன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.
பொள்ளாச்சி, ஜோதிநகர், அமைதி நகரில் உள்ள சித்தி விநாயகர், மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், 4ம் தேதி, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வுடன் துவங்கியது. 5ம் தேதி, காலையில், திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, ஆனைத்து வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, ஐம்பூத வழிபாடு, காப்பு அணிவித்தல் மற்றும் முளைப்பாளிகை எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாலையில், முதற்கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், பிரசாதம் வழங்குதல், எண் வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று 6ம் தேதி, காலையில் மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, ஆனைத்து ஆட்டி சாமிக்கு காப்பு அணிவித்தல், இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தானம், நிரையாகுதி, பெரும் பேரொளி வழிபாடு நடந்தது. தொடர்ந்து பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் திருக்குட ஞான உலா மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. இதில், ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ஶ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள், எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும்
பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின் அன்னம் பாலிப்பு, தசா தரிசனம் நடந்தது. சாந்தலிங்க மருதாசலா அடிகளார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாட்டு மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழவும், செல்வம், புகழ், பெருமை, துணிவு, வலிமை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. பேரூர் ஆதீனம் சார்பில் தீப வழிபாடு வாரத்திற்கு மூன்று முதல் நான்கு இடங்களில் நடக்கிறது. பொருட்செலவு காரணமாக ஒரு சிலர் பின்வாங்கலாம். ஆனால் எளிய முறையில் தீப வழிபாடு செய்யலாம். திருக்குட நன்னீராட்டு விழா எப்படி நடப்பட்டதோ, அதே போன்று விளக்கு வழிபாடு நடத்தி தரப்படும். மேலும், நேரில் அணுகினால் வீடுகள், கோவில்கள் மற்றும் பொது இடங்கள் தீபா வழிபாடுகள் நடத்தலாம் என்றார்.