உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை.. காரிய சித்தி கணபதிக்கு சங்கட நிவாரண ஹோமம்!

நாளை.. காரிய சித்தி கணபதிக்கு சங்கட நிவாரண ஹோமம்!

பஞ்செட்டி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (20ம் தேதி), வாலீஸ்வரர் கோவிலில் உள்ள காரிய சித்தி கணபதிக்கு, சங்கட நிவாரண ஹோமம் நடைபெறுகிறது. பொன்னேரியை அடுத்த, பஞ்செட்டி அருகே, நத்தம் கிராமத்தில் ஆனந்தவல்லி சமேதவாலீஸ்வரர் கோவில் உள்ளது. பரிகார ஸ்தலமான இக்கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னிதியில், ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, சிறப்பாக நடைபெறுகிறது. நாளை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, காலை, 8:00 மணி முதல், 12:00 மணி வரை, சங்கட நிவாரண ஹோமம், ஸகஸ்ர நாம அர்ச்சனையும் நடைபெறுகிறது. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மதியம், 12:30 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது. சிறப்பு அபிஷேகம்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் தீர்த்திஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னிதியிலும், காக்களூர் பூங்கா நகர் ஜலநாராயணர் சன்னிதியில் உள்ள செல்வ விநாயகருக்கு, மாலை, 5:30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !