மாகாளியம்மன் கோவிலில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி!
ADDED :4255 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில், திருவிழாவையொட்டி, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில், திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது. கடந்த 6ம் தேதி கோவில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி மற்றும் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று காலை 7:00 மணிக்கு குண்டம் இறங்குதல், காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும்; 21ம் தேதி காலை 9:00 மணிக்கு சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராடுதல்; இரவு 8:00 மணிக்கு மகா அபிேஷகம், ஆராதனை பூஜைகள் நடைபெறுகிறது.