திருப்பரங்குன்றம் முருகனுக்கு பட்டாபிஷேகம்!
ADDED :4252 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு (மார்ச் 19ல்) பட்டாபிஷேகம் நடக்கிறது. இரவு 8 முதல் 8.30 மணிக்குள் கோயில் ஆறுகால் பீடத்தில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹார லீலையை முன்னிட்டு நேற்று மாலை வீதி உலா நிகழ்ச்சியில் யானை, ஆடு, சிங்கம் உட்பட பல்வேறு தலைகளுடன் மாறி மாறி சூரபத்மன் முன்செல்ல, குதிரை வாகனத்தில் வீரபாகுத் தேவரும், திருவிழா நம்பியார் சிவாச்சார்யார் வாள் ஏந்தி சென்றனர். தொடர்ந்து கௌதா சப்பரத்துடன், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வேலுடன் விரட்டிச் சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை நடக்கிறது.