கமுதியில் முத்துமாரியம்மன் கோவிலில்.. பக்தர்கள் சேத்தாண்டி நேர்த்திக்கடன்!
ADDED :4252 days ago
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரியம்மன்கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து(உடலில் சேற்றை பூசிக்கொண்டு) நேர்த்தி கடன் செலுத்தினர். கமுதியில் தனியாருக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு, இத்திருவிழாவில் பக்தர்கள், அக்னிசட்டி, பூச்சொறிதல், திருவிளக்குபூஜை, உருண்டு கொடுத்தல் உட்பட பல நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சேத்தாண்டிவேடம் அணிந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இக்கோயிலில் மட்டுமே சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும்.