மதுரை மீனாட்சி கோவில் கிழக்கு கோபுர கும்பாபிஷேகம்!
ADDED :4321 days ago
மதுரை: மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில், கிழக்கு ராஜகோபுரத்திற்கு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆண்டு, நவம்பர், 8ல், மதுரையில், இடியுடன் மழை பெய்த போது, மீனாட்சி அம்மன் கோவில், கிழக்கு ராஜகோபுரம் மீது, இடி தாக்கியது. இதனால், கோபுர கலசங்கள், சுதைகள் சேதமுற்றன. அவற்றை சீர்செய்யும் பணி, 15 லட்சம் ரூபாயில் நடந்தது. கோபுரம் மீது வர்ணம் பூசப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளது. இக்கோபுரத்திற்கு, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.