உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பூர நாக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கற்பூர நாக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: ஸ்ரீமத் கற்பூர நாக காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சிதம்பரம் காயத்ரி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீமத் கற்பூர நாக காளியம்மன் கோயில் கும்பாபிஷேம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 17-ம் தேதி முதல் யாகசாலை பூஜை நடந்தது.நேற்று காலை  7 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து தீபாராதனை, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து  கடம் புறப்பாடாகி காலை 10 மணிக்கு  மேல் 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருப்பணி கமிட்டியினர் , பொதுமக்கள்  செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !