உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை

அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை

கடலூர்: மேல்காங்கேயன் குப்பம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன் குப்பத்தில் அமைந்துள்ள அங்கள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், ஆண்டு தோறம் பங்குனி மாத அமாவாசையில் நடக்கும் மயான கொள்ளை  பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றதாகும்.இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழா நாட்களில் தினமம் இரவில், அம்மன் வீதியுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 29-ம் தேதியன்று தேரத்திருவிழாவும், 30-ம் தேதியன்று மாலை 5.00 மணிக்கு, மயானக் கொள்ளை திருவிழாவும் நடக்கிறது.இற்கான கொடியேற்றுவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கிராம மக்கள்  செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !