பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்!
பொள்ளாச்சி : பொள்ளாச்சி விஸ்வகர்மா கமாட்சியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிேஷக விழா நடந்தது. மகாலிங்கபுரத்திலுள்ள இக்கோவிலில், கடந்த 15ம் தேதி முதல் கும்பாபிேஷக விழா சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. முதல் கால யாக பூஜை 17ஆம் தேதி நடந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், நவரத்தின நியாசம் உள்ளிட்ட பூஜைகள் 18ஆம் தேதியும் நடந்தன. நேற்று காலை 6:00 மணி முதல் வேதபாராயணம், நான்காம் கால யாக பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. அடுத்து 9:30 மணிக்கு மஹா பூர்ணாஹீதியும், தொடர்ந்து 10:15 மணியளவில் மகா கும்பாபிேஷகமும் நடைபெற்றது. கும்பாபிேஷகத்தை தொடர்ந்து பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், அரசு வக்கீல் கிரி உள்ளிட்ட பிரமுகர்களும், கோவில் நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.