உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பங்குனி தூக்கத் திருவிழா

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பங்குனி தூக்கத் திருவிழா

நாகர்கோவில்: தென் இந்தியாவில் புகழ்பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை வழக்கமான பூஜைகள் முடிந்து தூக்க நேர்ச்சை நடக்கும் கோயிலுக்கு கொடிமரம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து பழைய கோயிலில் இருந்து அம்மன் எழுந்தருளி கொல்லங்கோடு மடம், திருமன்னம் சந்திப்பு உட்பட பல பகுதிகளில் பூஜைகள் பெற்று மதியம் கோயில் சன்னதி வந்தடைகிறது. பின்னர் கோயில் தந்தரி நாராயணன் விஷ்ணு நம்பூதிரி கொடியேற்றுகிறார். தொடர்ந்து தொடக்கவிழா நடக்கிறது. கோயில் தலைவர் ராமசந்திரன் தலைமை தாங்குகிறார். கேரள அமைச்சர் சிவகுமார், தமிழக அமைச்சர் பச்சைமால், கிள்ளியூர் எம்எல்ஏ ஜாண்ஜேக்கப், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கொல்லங்கோடு பேரூராட்சி தலைவர் அருளானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். திருவிழா நாட்களில் சிறப்பு நிகழ்வாக 3-ம் நாள் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை பதிவு ஆரம்பம், 4-ம் நாள் நடிகை சோபனா குழுனிவரின் கர்நாடாக இசை பரதநாட்டியம் 7-ம் நாள் பண்பாட்டு மாநாடு,9-ம் நாள் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுதலைவர் ராமசந்திரன் நாயர். உபதலைவர் அப்புக்குட்டன் நாயர், செயலர் மோகனகுமார், துணைசெயலர் சுகுமாரன் நாயர், பொருளாளர் சனல்குமாரன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், பிரதிநிதிகள் நாயர், துணை சேர்மன் குட்டன் பிள்ளை ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !