உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் 29ல் பிரம்மோற்சவம் துவக்கம்!

கோதண்டராமர் கோவிலில் 29ல் பிரம்மோற்சவம் துவக்கம்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோதண்டராமர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, வரும், 29ம் தேதி துவங்கி, ஏப்., 9 ம் தேதி வரை நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோதண்டராமர் கோவில், நெடும்பரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, வரும், 29ம் தேதி, மூலவர் திருமஞ்சனத்துடன் துவங்குகிறது. அடுத்த மாதம், 9ம் தேதி, உற்சவர் திருமஞ்சனம் மற்றும் புஷ்ப யாகத்துடன் முடிவடைகிறது.

தேதி   நேரம்           நிகழ்ச்சி நிரல்
மார்ச் 29 காலை மூலவர் திருமஞ்சனம் மாலை அங்குராப்பணம்
30 காலை கொடியேற்றம் மாலை அம்ச வாகன சேவை
31 காலை உற்சவர் திருமஞ்சனம் மாலை சிம்ம வாகனம்
ஏப்., 1 காலை உற்சவர் திருமஞ்சனம் மாலை கருட வாகனம்
2 காலை உற்சவர் திருமஞ்சனம் மாலை சேஷ வாகனம்
3 காலை உற்சவர் திருமஞ்சனம் மாலை அனுமந்த வாகனம்
4 காலை உற்சவர் திருமஞ்சனம் மாலை யானை வாகனம்
5 காலை சூர்யபிரபை மாலை சந்திர பிரபை
6 காலை உற்சவர் திருமஞ்சனம் மாலை குதிரை வாகனம்
7 காலை தீர்த்தவாரி மாலை கொடி இறக்கம்
8 காலை திருக்கல்யாணம் மாலை ஸ்ரீராமநவமி வீதி புறப்பாடு
9 காலை புஷ்ப யாகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !