ஸ்ரீமுஷ்ணத்தில் வித்யா ஹோமம்!
ADDED :4321 days ago
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்பு வித்யா ஹோமம் நடந்தது. இதனையொட்டி லட்சுமி ஹயக்கிரீவர், தட்சணாமூர்த்தி, வித்யா சரஸ்வதி, வல்லப கணபதி உள்ளிட்ட தேவதைகளுக்கு கலசம் வைத்து சிறப்பு வித்யா ஹோமம் நடந்தது. பின்னர் தட்சணாமூர்த்தி சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாக தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஜனகல்யாண் அமைப்பினர் மற்றும் ரவிசுந்தர், ஜெய்சங்கர் குருக்கள் செய்திருந்தனர்.