கொட்டாம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா!
ADDED :4238 days ago
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர். சின்னகொட்டாம்பட்டி, வலைச்சேரிபட்டி, மணப்பச்சேரி, சொக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 60 ஆண்டுகளுக்கு முன் கொட்டாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியிலிருந்த போலீஸ்காரர் ஒருவர் கோயில் உருவாக காரணமாக இருந்ததால், ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பங்குனித் திருவிழாவில் கொட்டாம்பட்டி போலீசாருக்கு முதல்மரியாதை வழங்குவது தற்போதும் தொடர்கிறது.