நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் ஆன்மிக ஊர்வலம்!
ADDED :4322 days ago
பரமக்குடி: நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், வழிபாட்டு திருச்சபையினரால் நடைபெறும் சோமவார வழிபாட்டின் ஆன்மிக ஊர்வலம் நேற்று நடந்தது. சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப் பட்டது. கோயில் செயல் அலுவலர் தெய்வச்சிலை ராமசாமி முன்னிலை வகித்தார். வழிபாட்டு திருச்சபை தலைவர் நவநீதன், செயலாளர் பூக்குமார், பொருளாளர் ஜெகநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.