காளியம்மன் கோவில் விழா இன்று கோலாகல துவக்கம்!
சேந்தமங்கலம்: காளியம்மன் கோவில் திருவிழா, இன்று (மார்ச் 25) கோலாலகமாக துவங்குகிறது. சேந்தமங்கலம் அடுத்த செல்லப்பம்பட்டியில், ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, கோவில் திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, இன்று (மார்ச், 25) மாலை, காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் அழைத்து வருவதல், இரவு, 7 மணிக்கு பொங்கல், மாவிளக்கு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மார்ச், 26) மாலை, 5 மணிக்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மார்ச், 27ம் தேதி பகல், 12 மணிக்கு எருமைகிடா வெட்டப்படுகிறது. மார்ச், 28ம் தேதி அம்மன் ஊர்வலம் மற்றும் வாணவேடிக்கை, மஞ்சள் நீராடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.