சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் பொங்கல் விழா!
ADDED :4247 days ago
சேலம்: சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், நேற்று பொங்கல் விழா நடந்தது. சேலம், குமாராசாமிப்பட்டி, வின்சென்ட் சாலையில் அமைந்துள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா, 18ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று, பொங்கல் வைபவம் மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து, வேண்டுதல்களை நிறைவேற்றினர். திரு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்தனர். திருவிழா வரும், 30ம் தேதி வரை நடக்கிறது.