அழிந்து வரும் மலைக்கோவில்: பாதுகாக்க நடவடிக்கை தேவை!
ADDED :4247 days ago
வானூர்: வானூர் ஒன்றியம் பெரும்பாக்கத்தில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் கோபுரம் அழிந்துவருவது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வானூர் ஒன்றியம் திருவக்கரை அடுத்த பெரும்பாக்கம் கிராமம் அருகில் கிழக்கு பக்கமாக உயரமாக மலை உள்ளது. இந்த மலை மீது மன்னர் காலத்தில் மலை மீது கருங்கற்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த கோவில் போதிய பராமரிப்பின்றி, சுவர்கள் இடிந்து நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. மலை மீது கோவிலில் முருகர் சிலை இருந்தது. இந்த சிலை மயிலத்திற்கு கொண்டு சென்றதாகவும், அதிலிருந்து இந்த மலைகோவிலில் சிலைகள் இல்லாமல் மண்டபம் மட்டும் உள்ளதாக கூறுகின்றனர். பெரும்பாக்கம் கிராமத்தில் அழிந்து வரும் பழங்கால கட்டக்கலைக்கு எடுத்துகாட்டாக விளக்கும் கல் மண்டப கோவிலை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.