புதுக்கோட்டை மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா
ADDED :4208 days ago
புதுக்கோட்டை : புதுக்கோட்டை உசிலங்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நேற்று நடைபெற்றது.இதையொட்டி தடிகொண்ட அய்யனார்கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி மற்றும் அலகுகுத்தி ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மாலை 6 மணியளவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.