காரைக்கால் காளியம்மன் கோயில் அக்னி கப்பரை விழா
ADDED :4208 days ago
காரைக்கால் : காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பங்குனி உத்சவத்தின் முக்கிய நிகழ்வான அக்னி கப்பரை வீதியுலா கடந்த வெள்ளியன்று இரவு அரசலாற்றங்கரையிலிருந்து தொடங்கியது.அக்னி கப்பரை ஏந்தும் மரபு குடும்பத்தை சேர்ந்தவர் அக்னி கப்பரை ஏந்தியவாறு, வீதிகளில் நடனமாடியவாறு சென்றார். பக்தர்களின் வீடுகளுக்கும் அக்னி கப்பரை கொண்டு செல்லப்பட்டது. , பக்தர்கள் அக்னி கப்பரைக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து, கடந்த 29-ம் தேதி அதிகாலை கப்பரை கோயிலை அடைந்தது.