மண்ணடி காளிகாம்பாள் கோவிலில் 108 விளக்கு பூஜை
ADDED :4258 days ago
சென்னை; சென்னை மண்ணடி, தம்புசெட்டித்தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில், உலக நன்மைக்காக, சைவப்பேரவை அமைப்பின் சார்பில், 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், கோவில் அறங்காவலர் ஆர்.சுப்பிரமணிய ஆச்சாரி, அமைப்பின் நிர்வாகிகள் கே.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.