ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி ரத யாத்திரை!
ADDED :4207 days ago
கிருமாம்பாக்கம்; அரியாங்குப்பம், மணவெளியில், ராமாநுஜரின் உஞ்சவிர்த்தி ரதயாத்திரை நடந்தது. ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி மாதந்தோறும் ஒவ்வொரு வில்களிலும் உஞ்சவிர்த்தி ரதயாத்திரை நடந்து வருகிறது. இம்மாதத்திற்கான ரதயாத்திரை அரியாங்குப்பம் மணவெளி திரவுபதியம்மன் கோவில் சன்னதியில் சிறப்பு அலங்காரத்துடன் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ராமாநுஜரின் உருவப்படம் பெருமாள் பிராட்டியின் உருவப்படங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, வலம் வந்தன. ரதயாத்திைரயில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் புதுச்சேரி சிஷ்யர்கள் செய்திருந்தனர்.