கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா
ADDED :4242 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம் வந்தனர்.கண்டாச்சிபுரம் வெற்றிவேல் குன்றத்தில் அமைந்துள்ள, சக்திவேல் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா துவங்கியது. இதையொட்டி சிறப்பு அபிஷேகத்திற்காக 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். வரும் 13ம் தேதி பங்குனி உத்திரம் நடக்கிறது.