உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பங்குனிஉத்திரவிழா.. கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநியில் பங்குனிஉத்திரவிழா.. கொடியேற்றத்துடன் துவக்கம்!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_29718_170855175.jpgபழநியில் பங்குனிஉத்திரவிழா.. கொடியேற்றத்துடன் துவக்கம்!பழநி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன், பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடுமூடி தீர்த்தக்காவடிக்கு புகழ்பெற்ற, பழநி பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து, திருஆவினன்குடி கோயிலுக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு, விநாயகர் பூஜை, அஸ்த்ர தேவர் காப்புக்கட்டு, கிராமசாந்தி, கலசங்கள் வைத்து மயூரயாகம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேல், மயில், சேவல் வரையப்பட்ட கொடிப்படம், திருஆவினன்குடிகோயில், வெளிப்பிரகாரம் சுற்றி வந்து, பாத விநாயகர் கோயில் வரை சென்று வந்தது. ஓதுவாõர்கள்கள் வேதபாரயணங்கள் பாட காலை 9.40 மணிக்கு, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. பின், முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன், கிரிவீதியில் உலாவந்தார். காலசந்தி பூஜையில் பெரியநாயகியம்மன் கோயிலிலும், உச்சிகாலத்தில் மலைகோயிலிலும் காப்புக்கட்டுதல் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, ஏப்.,12 ல் திருக்கல்யாணம், ஏப்.,13 ல் தேரோட்டம் மாலை 4 மணிக்கு மேல் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !