சிதம்பரம் கோதண்டராம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா!
ADDED :4232 days ago
சிதம்பரம்: கோதண்டராம சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, சுவாமி வீதியுலா நடந்தது. சிதம்பரம் திருச்சித்திரகூடம், மேலவீதியிலுள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் விஜய வருட, பிரம்மோற்சவ விழா கடந்த 30ம் தேதி காலை திருமஞ்சனத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை ருக்மணி கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு குதிரை நம்பிரான் சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (8ம் தேதி) இரவு முக்கிய நிகழ்ச்சியான சீதா கல்யாணம் நடக்கிறது.