புவனகிரி கொளஞ்சியப்பர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
ADDED :4237 days ago
புவனகிரி: புவனகிரி செல்வ கொளஞ்சியப்பர் கோவிலில் நாளை (9ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி,செல்வ கொளஞ்சியப்பர் மற்றும் சுப்ரமணியர் சுவாமிகளுக்கு கோவில் முன் வேத விற்பன்னர்களைக் கொண்டு யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தீபாரதனை நடந்து வருகிறது. நாளை காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை தொடங்கி கன்னிகா பூஜை, தம்பதி பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, நவகிரஹ பூஜையும் அதைத் தொடர்ந்து கடம் புறப்பாடாகி பகல் 11:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பழனிவேல், குமரவேல் செய்து வருகின்றனர்.