உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திராபதியார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

உத்திராபதியார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை உத்திராபதியார் கோவில் ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை உத்திராபதியார் கோவில் ஜீர்ணோத்தாரண  மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 5ம் தேதி காலை 7மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மிருத்ஸங்க்ரஹணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம் மற்றும் முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, நாடிசந்தானம், கோ பூஜை, வடுபூஜை, கன்னிகாபூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனைகள் நடந்தது. 9.25 மணிக்கு யாத்ராதானம், 9.35 மணிக்கு கடம் புறப்பாடு செய்து 10.05 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடந்தது.10.15 மணிக்கு உத்திராபதியார் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. விழாவில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !