சக்தி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4232 days ago
பொங்கலூர் : குள்ளம்பாளையம் சக்தி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா, கடந்த 4ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து யாக பூஜை நடந்தது. தீர்த்த கலசம் எடுத்து வரப்பட்டு, கோபுர கலசத்துக்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.தென்சேரிமலை முத்துசிவராமசாமி அடிகள், வரன்பாளையம் மவுன சிவாச்சல அடிகள்,ஞானசிவாசல சுவாமி ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.