உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை முனியப்பனுக்கு 1,000 கிடா வெட்டி பொங்கல் விழா!

கோட்டை முனியப்பனுக்கு 1,000 கிடா வெட்டி பொங்கல் விழா!

அனுப்பர்பாளையம் : தொரவலூர், கோட்டை முனியப்ப சுவாமி திருக்கோவிலில், 1,000 கிடா வெட்டப்பட்டு, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.திருப்பூர் ஒன்றியம், தொரவலூர் ஊராட்சியில், புகழ்பெற்ற கோட்டை முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. பொங்கல் விழா கடந்த மாதம் 24ம் தேதி சுவாமி சாட்டுதல் நிகழ்சியுடன் துவங்கியது. 7ம் தேதி கோவில் புகுதல், 8ல், அவரப்பாளையத்தில் இருந்து சக்தி கரகம், படைக்கலம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று (புதன்கிழமை) காலை, பக்தர்கள் பொங்கல் வைத்து முனியப்ப சுவாமிக்கு படைத்தனர். நேர்த்தி கடன் செலுத்த கொண்டு வரப்பட்ட, 1,000 கிடாக்கள் வெட்டப்பட்டன. அதன்பின், அன்னதானம் வழங்கப் பட்டது.நாளை (11ம் தேதி) மாலை, மஞ்சள் நீராடுதல், மறு பூஜை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோட்டை முனியப்பன் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !