உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயில் புதிய கொடி மர பணி தீவிரம்!

ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயில் புதிய கொடி மர பணி தீவிரம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயில் புதிய கொடி மர வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலுக்குட்பட்ட வடபத்ரசாயி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில மாதங்களாக துவங்கி நடந்து வருகிறது. இக்கோயிலில் வடபத்ரசாயி சன்னதி கொடிமரத்தை மாற்றி விட்டு , புதிய கொடிமரம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 44 அடி உயரத்தில் தேக்கு மரத்திலான புதிய கொடிமரம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக திருமுக்குளம் நீராட்டு மண்டபத்தில் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆண்டாள் கோயில், பெரியாழ்வார் சன்னதிகளில் புதிய தங்க கொடி மரம் அமைக்கப்பட்டது. இதில் ஆண்டாள் கோயில்கொடிமரத்தை உபயமாக கொடுத்த திருப்பூரை சேர்ந்த கல்பஜா பிரேம் சந்தர், தற்போது வடபத்ரசாயி கொடிமரத்தையும் உபயமாக கொடுத்துள்ளார். இந்த கொடிமரத்திற்கான தேக்கு மரத் தடி குற்றாலத்திலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டு, தற்போது அதை செதுக்கும் பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !