வீரமாட்சி அம்மனுக்கு கும்பாபிேஷகம்
உடுமலை : வீரமாட்சி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.உடுமலை, பூளவாடி கிராமத்தில் அமைந்துள்ளது வீரமாட்சி அம்மன் கோவில். இக்கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 6ம் தேதி மாலை திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. 7 ம்தேதி கணபதி வேள்வி, தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அன்று மாலை முதல்கால வேள்வி நடந்தது.நேற்று முன்தினம் காலை இரண்டாம்கால வேள்வியும், விமான கலசம் நிறுவுதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும் நடந்தன. இரவு 8.30 மணிக்கு, அடியார் வாழ்வில் அற்புதங்கள் என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை நான்காம் கால வேள்வியை தொடர்ந்து, 9.00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பட்டு விமானத்தை அடைந்தன. 9.15 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிேஷகமும், 9.30க்கு மூலமூர்த்திக்கு கும்பாபிேஷகமும் செய்யப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் 48 நாட்களுக்கு தினமும் மாலை 6.30 மணிக்கு, மண்டல பூஜை நடக்கிறது.