காரைக்குடி மாரியம்மன் கோயில் விழா
ADDED :4239 days ago
காரைக்குடி : காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில், பங்குனி பொங்கல் விழா, கடந்த 4ம் தேதி, பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. கடந்த 6ம் தேதி, காலை கணபதி ஹோமமும், 7.30 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம், வரும் 13ம் தேதி நடக்கிறது. அன்று மாலை முத்தாலம்மன் கோயிலிலிருந்து கரகம், மதுக்குடம், முளைப்பாரி ஊர்வலமாக, கோயிலை வந்தடையும். விழா நாட்களில், மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது.