திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு!
ADDED :4240 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 23 கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆய்வாளர் அய்யம் பெருமாள், கோயில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முகமுத்தரசப்பன் பங்கேற்றனர். உண்டியல் எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மொத்தம் 168 கிராம் தங்கம், 909 கிராம் வெள்ளி, ரொக்கம் ரூ.16.34 லட்சம் இருந்தது.