தண்டலம் அகஸ்தீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
ADDED :4240 days ago
ஸ்ரீபெரும்புதுார் : தண்டலத்தில், திரிபுரசுந்தரி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்துள்ள தண்டலம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் குளக்கரையில், பழமையான திரிபுரசுந்தரி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாம்முக கணபதி, பாலமுருகர், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சூரியன், துர்க்கை, சரஸ்வதி, பைரவர் என, கோஷ்டி மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். இக்கோவிலை புனரமைக்கப்பட்டு, அஷ்டபந்தன கும்பாபிஷேகம், நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது. மங்கள இசை நிகழ்ச்சியுடன், புனித நீர் கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அகஸ்தீஸ்வரரை வழிபட்டனர்.