வள்ளலார் மன்றத்தில் பங்குனி மாத பூச விழா
ADDED :4239 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் பங்குனி மாத பூச விழா நடந்தது. மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் நாராயணன், பாலு, முத்துகருப்பன் முன்னிலை வகித்தனர். ஜவுளி வணிகர் சீனுவாசன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் தமிழ் மணி அடிகள், வேலா சாரங்கபாணி முன்னிலை யில் உலக நலனிற்காக பிரார்த்திக்கப்பட்டது. உழவார திருக்கூட பொருளாளர் சின்னதம்பி, கார்த்தி, மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.