உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விட்டலபுரி ராமர் கோவிலில் "ராமநவமி விழா துவக்கம்

விட்டலபுரி ராமர் கோவிலில் "ராமநவமி விழா துவக்கம்

குமாரபாளையம்: விட்டலபுரி ராமர் கோவிலில், ராமநவமி விழா துவங்கியது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். குமாரபாளையம் விட்டலபுரி ராமர் கோவிலில், ராமநவமி விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை, 10 மணிக்கு, ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ஏப்ரல், 20ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில், தினமும் காலை, 10 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு சிறப்பு பஜனைகள், ஆராதனைகள் நடக்கிறது. ஏப்ரல், 18ம் தேதி மாலை, 6 மணிக்கு, சீதா திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு, சேலம் சாலை முனியப்பன் தேவஸ்தானத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடகந்கிறது. 19ம் தேதி இரவு, 7 மணிக்கு, சீதா சமேத ராமபிரான், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 20ம் தேதி, சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !