சோழவந்தான் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கதிருவிழா!
ADDED :4298 days ago
சோழவந்தான்: சோழவந்தான் நாடார்தெரு பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா 10 நாட்கள் நடந்தது. இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் அக்கினிச்சட்டி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி தரிசித்தனர். சண்முகவேல் பூசாரி சக்திகரகம் எடுக்க, புனிதநீர் நிரம்பி குடங்களை பக்தர்கள் சுமந்து கோயில்வர, அம்மனுக்கு அபிஷேக பூஜை,பொங்கல் படைக்கப்பட்டது. முளைப்பாரியை ஊர்வலமாக வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. பின்னர் ராஜஅலங்காரத்தில் அம்மன் ரிஷபவாகனத்தில் முக்கியவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உறவின்முறை தலைவர் முருகேசன், துணைதலைவர் அண்ணாமுருகன், செயலாளர் ஜவகர், பொருளாளர் சண்முகராஜா,, குணசேகரன் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.