பாதூர் பெருமாள் கோவிலில் 14ம் தேதி லட்ச தீப திருவிழா
ADDED :4230 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள வீர ஆஞ்ச நேயர் சுவாமிக்கு 17ம் ஆண்டு லட்ச தீப திருவிழா வரும் 14ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 8.30 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், 11 மணிக்கு ததியாராதனை, மாலை 3 மணிக்கு மாலை பஜனை, மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது சுவாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம், லட்ச தீப திருவிழா நடக்கிறது. மாலை 6 மணிக்கு பெருமாள், வீர ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா புறப்பாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் விஜயராகவஅய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.