மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
4168 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4168 days ago
சேலம்: சேலம், அய்யன் திருமாளிகை மாரியம்மன் கோவில் விழாவில், அஷ்டலட்சுமி அலங்காரம் செய்து, புஷ்ப பல்லக்கில், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.சேலம், அய்யன் திருமாளிகை மாரியம்மன் திருவிழா, கடந்த, 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மார்ச், 31ம் தேதி கம்பம் நடும் விழா நடந்தது. ஏப்ரல், 7ம் தேதி, பக்தர்கள் திருக்குட ஊர்வலம் சென்றனர். 8ம் தேதி, பால் குட ஊர்வலம், மாரியம்மனுக்கு கூழ் படைத்தல் நடந்தது. இரவு, பக்தர்களின் மா விளக்கு ஊர்வலம் நடந்தது. 9ம் தேதி, நூற்றுக்கணக்கான பக்தர்கள், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தனர்.தொடர்ந்து, அக்னி கரகம், பூ கரகம், அலகு குத்துதல், சக்தி கரகம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. 10ம் தேதி மாலை, வண்டி வேடிக்கை நடந்தது. அன்று இரவு புஷ்ப பல்லக்கில், அஷ்ட லட்சுமிகள் மலர், பத்து ரூபாய் நோட்டுகளுடன் அலங்காரமாக வீற்றிருந்தனர்.தானிய லட்சுமி, மகாலட்சுமி, வரலட்சுமி, தனலட்சுமி, கஜலட்சுமி, விஜயலட்சுமி, வித்ய லட்சுமி, சந்தான லட்சுமி என, எட்டு லட்சுமிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெற்றது.
4168 days ago
4168 days ago