பெருமாள் கோவிலில் இன்று சேர்த்தி சேவை
ADDED :4229 days ago
ஈரோடு: ஈரோடு கோட்டை, கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், பங்குனி உத்திர உற்சவம் சேர்த்தி சேவை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
அதனொரு பகுதியாக, இன்று (ஏப்., 12ம் தேதி) மாலை, ஆறு மணிக்கு, 108 கலச ஆவாஹணம் பூஜை நடக்கிறது. ஏப்., 13ம் தேதி காலை, ஆறு மணிக்கு, ஹோமம், பூர்ணாஹூதி விசேஷ சேர்த்தி, 108 கலச திருமஞ்சனம், இரவு, ஒன்பது மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடக்கிறது.
மாலை, 4.15 மணிக்கு தாயாருக்கும், பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏப்., 14ல் ஜய வருடப்பிறப்பு சிறப்பு பூஜை நடக்கிறது.